Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தக்கலையில் பா.ஜ.க. பாதயாத்திரை பொதுக்கூட்டம்: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பங்கேற்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை சுவாமியார்மடம் சந்திப்பில் இ...

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை சுவாமியார்மடம் சந்திப்பில் இருந்து நேற்று மாலை தொடங்கியது. இந்த பாதயாத்திரையை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் தங்கப்பன், நிர்வாகிகள் உண்ணிகிருஷ்ணன், வேல்பாண்டியன், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரை காட்டாத்துறை, கல்லுவிளை, முளகுமூடு, அழகியமண்டபம் வழியாக தக்கலையை சென்றடைந்தது. பின்னர் இரவு பஸ்நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்து கொண்டு பேசினர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், அரசியல் மேடைகளில் பேசி எனக்கு பழக்கமில்லை. கொடுத்த வசனத்தை பேசித்தான் பழக்கம் உண்டு. பா.ஜ.க.வில் உறுப்பினராக நான் இல்லை. ஆனால் மோடியின் விசிறி நான். அவரை பற்றி பேசுவதற்காகவே இங்கு வந்துள்ளேன். அதுவும் நாட்டின் பிரஜையாக பேசுகிறேன் என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் மகாத்மாகாந்திக்கு மட்டும் தான் சிலை வைக்கப்பட்டுள்ளது. காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாட காங்கிரசார் முன்வரவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்று கூறியதால் அவரது பிறந்தநாளை கொண்டாட காங்கிரசார் மறந்து விட்டார்களோ, என்னவோ. இந்தியாவை ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல். அவர் இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா பல நாடுகளாக பிரிந்திருக்கும். அவரை போல் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்