Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சிறப்பு கட்டுரை: குமரி விடுதலை போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு

நவம்பர் முதல் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடி வருகிறது குமரி மாவட்டம். ஒரு குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்து நடத்தப்படும் நிக...

நவம்பர் முதல் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடி வருகிறது குமரி மாவட்டம்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகள் வேறு யாரும் திருக்குமரி விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெறவில்லையோ என்ற தோற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும் வகையில் நடைபெறுகிறது.

திருக்கொச்சி சமஸ்தான ஆட்சியாளர்களின் கொடுமைகளை எதிர்த்து போராட்ட களத்தில் முன்னிலை வகித்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் தியாகம் படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது.
குமரித்தந்தை நேசமணி அவர்களுக்கு மார்ஷல் என்று பட்டம் சூட்டி போராட்ட களத்தில் இணைந்து பயணித்த கோட்டாறு ஏ. ஏ. ரசாக் பிற்காலத்தில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தவர். இடலாக்குடி பகுதியில் உள்ள ரசாக் ரோடு இவரது நினைவாக உள்ளது.

சுமார் 460 பக்கம் கொண்ட ''நேசமணி ஒரு சரித்திர திருப்பம்'' என்ற நூல் ஆசிரியர். தற்போது பத்மனாபபுரம் தொகுதி என்று அழைக்கப்படும் கல்குளம் தொகுதியிலிருந்து திருக்கொச்சி மாநில உறுப்பினர் பதவி வகித்த கல்வியாளர் டாக்டர் நூறு முகமது (சூரங்குடி).

புதுக்கடை அருகில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் நெஞ்சில் குண்டடிப்பட்டு வீர மரணம் அடைந்த தேங்காய்பட்டணம் பீர் முகமது. தனது பத்திரிக்கை மூலம் தெற்கெல்லை போராட்ட செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து எனது வலதுகை என்று நேசமணி அவர்களால் புகழப்பட்ட கோட்டாறு போராளி எம். கே. பாவா.
போராட்டம் உச்சகட்ட காலத்தில் பொருளாதாரத்தை வாரி வழங்கிய தக்கலை என. எஸ். முதலாளி மகன் நைனா முகமது பின்னர் பத்மனாபபுரம் நகராட்சி தலைவர் பதவி வகித்தவர்.

பலமுறை சிறை சென்ற தெற்கெல்லை போராட்ட வீரர் கொடிக்கால் சேக் அப்துல்லா. ம. பொ. சிவஞானத்துடன் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு எழுச்சியூட்டிய கவி. கா. மு. ஷெரீப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெருமக்களின் தியாகம் நிறைந்த பங்களிப்பு நினைவு கூறுவோம்.

News
Colachel Azeem

1 comment




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்