குமரி மாவட்ட பல்சமய உரையாடல் குழுவின் சார்பில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கு பெற்ற ஒரு மாநாடு நேற்று (02-11-2019) பிற்பகல் நாகர்கோவ...
குமரி மாவட்ட பல்சமய உரையாடல் குழுவின் சார்பில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கு பெற்ற ஒரு மாநாடு நேற்று (02-11-2019) பிற்பகல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அரங்கில் வைத்து நடைபெற்றது.
கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சி.எஸ். ஐ குமரி பேராயர் டாக்டர் ஏ.ஆர். செல்லையா, இரட்சண்ய சேனை வட்டார தளபதி மேஜர் குமாரதாஸ்,
நாகர்கோவில் இஸ்லாமிய கலாச்சார கழக பள்ளிவாசல் இமாம் மவுலவி எம். ஏ.ஷவுக்கத் அலி உஸ்மானி, குமரி மாவட்ட பிரம்மா குமாரிகள் அமைப்பின் அமைப்பாளர் கோகிலா, வெள்ளிமலை ஶ்ரீ விவேகானந்தா ஆஸ்ரமம் தலைவர் சைதன்யானஜி மகராஜ், சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார், சென்னை தமிழ் மையம் இயக்குனர் அருட்திரு. ஜெகத் கஸ்பார் ஆகியோர் உரையாற்றினர்.
திருவாளர்கள் சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ், ஏ.வி.பெலார்மின், ஹெலன் டேவிட்சன், மீனாதேவ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஐநூறுக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து சிறப்பித்தனர்.
குமரி மாவட்ட அன்றைய தாய்மார்கள் மேலாடை அணிவதற்கு அனுமதிக்க திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு திப்புசுல்தான் அனுப்பிய எச்சரிக்கை சம்பவத்தை பாலபிரஜாபதி அடிகளாரும், காந்தியடிகள் ஏன் கலீஃபா உமரின் ஆட்சியை கொண்டு வர விரும்பினார் என்று மவுலவி ஷவுக்கத் அலி உஸ்மானியின் உரையும் முத்தாய்ப்பாக அமைந்தது.
News & Photo
Colachel Azeem
No comments