குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சாஜஹான் (வயது 52). இவர் உகாண்டா தலைநகர் கம்பாலா-வில் வில்லியம் ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு ஃபா...
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சாஜஹான் (வயது 52). இவர் உகாண்டா தலைநகர் கம்பாலா-வில் வில்லியம் ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு ஃபார்மஸி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று (29-10-2019) இரவு, இவர் பணியினை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
உடனே அவரை ஓல்ட் கம்பாலா பகுதியில் உள்ள பாய் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து சாஜஹான் மரணமடைந்தார்.
அவரது உடல் நல்லடக்கம், கம்பாலாவில் உள்ள “ஜின்ஜா போலீஸ் ஸ்டேஷன்” (Jinja Police Station) அருகே அமைந்துள்ள மையவாடியில் வைத்து நடைபெறுகிறது.
அதற்கு முன்னர் “வாண்டகேயா” பகுதியில் உள்ள மசூதியில் வைத்து சிறப்பு தொழுகைக்கு பின்னர் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது.
No comments