திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, நாகா்கோவில் பகுதியில் ஆழ்துளைக் கி...
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, நாகா்கோவில் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளின் நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் தலைமை வகித்தாா்.
நாகா்கோவில் நகா் பகுதியில் திறந்த வெளியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து, உடனடியாக அவற்றை மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றிட வேண்டும். அவ்வாறு செய்ய வாய்ப்பில்லாவிட்டால் அதனை நிரந்தரமாக கான்கிரீட், சரளைக்கற்கள் கொண்டு மூடி விட வேண்டும்.
தெரு, வாா்டு வாரியாக நகரின் அனைத்து பகுதிகளிலும் 7 குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்பிா்க்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் திறந்த வெளியில் ஆழ்துளை கிணறுகள் குறித்து, பாதுகாப்பில்லாத கைவிடப்பட்ட ஆழ்துறை கிணறுகள் கண்டறியப்பட்டால் மாநகராட்சிக்கு 9445350960, 04652- 230985 ஆகிய தொலைபேசி எண்களில் புகாா் தெரிவிக்க வேண்டும்.
தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து பணியாளா்களும் செயல்பட வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாநகரப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலா் கிங்சால், குடிநீா் பொருத்துநா்கள், குடிநீா் கணக்கீட்டாளா்கள், குடிநீா் வால்வு ஆபரேட்டா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments