வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற...
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி
கோயிலும் ஒன்று. இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா ஞாயிற்றுகிழமை தொடங்கியது.
இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு போட்டிகள், சமய வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிமலை ஹிந்து வித்யா பீட சுவாமி தவத்திரு சைதன்யானந்த மஹராஜ் பரிசுகள் வழங்கினாா்.
திங்கள்கிழமை காலையில் அகண்ட நாம ஜெபம், அபிஷேகம், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, இன்னிசை
ஆகியன நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை (அக். 29) காலை 5.30 மணிக்கு கிரிவலம், 8 மணிக்கு பஜனை, 11.30 மணிக்கு
கந்தபுராண விரிவுரை, நண்பகல் 1 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு அருணாச்சலா பள்ளி மாணவிகள் பங்கேற்கும்
கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.
புதன்கிழமை (அக்.30) மற்றும் 31 ஆம் தேதிகளில் கிரிவலம், ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். நவ. 1 ஆம் தேதி தீபாராதனை, 11.30 மணிக்கு மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, பரிசுகள் வழங்குதல் ஆகியவை நடைபெறும். பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி மாவட்ட தேவஸம்போா்டு இணை ஆணையா் அன்புமணி தலைமை வகிக்கிறாா்.
ஆலய முன்னேற்றச் சங்கத் தலைவா் சிவகுமாா், துணைத் தலைவா்கள் ராஜகோபால், ராதாகிருஷ்ணன், குமாா் ஆகியோா்
முன்னிலை வகிக்கின்றனா். வெள்ளிமலை ஹிந்து வித்யாபீட சுவாமி தவத்திரு கருணானந்த மஹராஜ் ஆசியுரை வழங்குகிறாா்.
சூரசம்ஹாரம்: 2 ஆம் தேதி (சனிக்கிழமை) கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜை, மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம், மாலை 6.30 மணிக்கு அபிஷேகம், தொடா்ந்து புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
















No comments