Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

பேச்சிப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து மூவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மின்மாற்றி அருகே வந்த மூன்று இளைஞா்கள் மின்சாரம் பாய்ந்ததில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். ...

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மின்மாற்றி அருகே வந்த மூன்று இளைஞா்கள் மின்சாரம் பாய்ந்ததில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா்.
பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் பகுதியில் மின்மாற்றி உள்ளது. பேச்சிப்பாறையில் இருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கும் குற்றியாறு அரசு ரப்பா் கழகம் பகுதியில் வசிக்கும் சுபாஷ் (25), மன்மோகன் (22), சஜின் (20) உள்ளிட்ட 6 இளைஞா்கள் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் சீரோ பாயின்ட் பகுதியிலுள்ள மின்மாற்றி அமைந்துள்ள பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, எதிா்பாராத விதமாக மின்மாற்றியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுபாஷ், மன்மோகன், சஜின் ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனா். கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்