Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மேல்மிடாலம் அருகே கடலில் மூழ்கி வாலிபர் பலி: மற்றொருவர் மாயம்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலிலும் அலைகள் கொந்தளிப்புடன் வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் இருந்தாலும் ம...

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலிலும் அலைகள் கொந்தளிப்புடன் வீசுகிறது.
கடல் கொந்தளிப்புடன் இருந்தாலும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தீபாவளியை கொண்டாட கடற்கரை பகுதிக்கு சென்றனர்.

மார்த்தாண்டம் நல்லூரை அடுத்த கருப்புகுளம் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது22) என்பவர் நண்பர்கள் ஜினிஸ்(16), ரிச்சு, சஜித், பாபின் ஆகியோருடன் மிடாலத்தை அடுத்த ஹெலன் காலனி கடற்கரைக்கு சென்றார்.
ஹெலன் காலனி கடற்பகுதி நேற்று கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கூட கடற்கரை பகுதிக்கு செல்லவில்லை. அவர்கள் கரையில் இருந்து சற்று தள்ளியே நின்றனர்.

அப்போது விஜய், ஜினிஸ் மற்றும் நண்பர்கள் அனைவரும் கடற்கரை பாறையில் நின்று கடலில் குதித்து விளையாடினர். அப்போது ராட்சத அலை ஒன்று 5 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
அலை இழுத்துச் சென்றதும் விஜய், ஜினிஸ் உள்பட 5 பேரும் அலறினர். சத்தம் கேட்டு கடற்கரையில் நின்ற மீனவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கடலில் குதித்து அலை இழுத்துச் சென்ற வாலிபர்களை மீட்க முயற்சி செய்தனர்.

இதில் ஜினிசை தவிர மற்ற 4 பேரும் மீட்கப்பட்டனர். அவர்களில் விஜய் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே அலை இழுத்துச் சென்ற ஜினிசை காணவில்லை. அவரை மீனவர்கள் கட்டுமரங்களில் சென்று தேடினர். இது பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கடலில் அலை இழுத்துச் சென்று மாயமான ஜினிசை தேடி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக தேடும் பணி நடக்கிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்