Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஸ்டாலின்

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக பல்வேறு மீட்புக்குழுவின...

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக பல்வேறு மீட்புக்குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அங்கு சென்று சுஜித்தின் கல்லறையில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சுஜித்தின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சுஜித்தை இழந்து வாடும் அவனது பெற்றோருக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்