தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழைகாலம் மற்றும் குளிர்காலங்களில் டெங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும் என கூறப்படு...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழைகாலம் மற்றும் குளிர்காலங்களில் டெங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இருந்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு திறக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க, குமரி மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சி பகுதியிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடு வீடாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுரையின் பேரிலும், மாநகர் நலஅதிகாரி டாக்டர் கிங்சால் மேற்பார்வையிலும் மாநகராட்சி பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி நடந்து வருகிறது.
பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடும், பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து புகை அடிக்கப்படுகிறது. எஸ்பி ஆபீஸ் ரோடு, செம்மாக்குடி ரோடு, பிரிமியர் ஸ்டுடியோ தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து புகை அடித்தனர்.
















No comments