கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொக்குன்னி பகுதியை சேர்ந்தவர் வினுகுமார். இவரது மகள் வனிதா (வயது 21, Name changed). இதேபோல் இரிங்காடன் பள்ளி...
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொக்குன்னி பகுதியை சேர்ந்தவர் வினுகுமார். இவரது மகள் வனிதா (வயது 21, Name changed). இதேபோல் இரிங்காடன் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வினீஷ் (Name changed).

வினிதா – வினீஷ் திருமணம் அந்த பகுதியில் ஒரு மண்டபத்தில் தடபுடலாக நடந்தது. தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து மணமகளின் வீட்டில் மறுவீடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உடைகளை மாற்றிவிட்டு வருவதாக கூறி மணமகள் வினிதா அறைக்கு சென்றார். அவருடன் தோழி ஒருவரும் சென்றார்.
நீண்ட நேரமாகியும் மணமகள் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த இருவீட்டாரும் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது வினிதாவை காணவில்லை. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தனர். அதில் மணப்பெண் வனிதா காரில் ஏறி செல்வது பதிவாகி இருந்தது.
விசாரணையில் வனிதா கொக்குன்னி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவருடன் தான் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கோழிக்கோடு கசபா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
















No comments