Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தனியாக கட்சி ஆரம்பித்தாலும் பாஜவில் ரஜினி சேர வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தனியாக கட்சி ஆரம்பித்தாலும் ரஜினி, பாஜவில் சேரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்...

தனியாக கட்சி ஆரம்பித்தாலும் ரஜினி, பாஜவில் சேரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வேலூர் கிழக்கு மாவட்ட பாஜ கட்சி சார்பில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கல்ப பாதயாத்திரை காட்பாடி காந்தி நகரில் தொடங்கி, சித்தூர் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடும் தருணத்தில் வரும் தீபாவளியை தமிழக மக்கள் மதுஇல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட வேண்டும்.

டாஸ்மாக் விற்பனையை தீபாவளிக்காக ரூ.585 கோடி இலக்கு நிர்ணயித்து வியாபாரத்தை துவங்கியுள்ளது. வேதனையாக உள்ளது. பண்டிகை காலங்களில் இளைஞர்கள் மது அருந்துவதை விட துயரம் வேறு எதுவுமில்லை.

கதர் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக இந்த தீபாவளியை கதராடை அணிந்து கொண்டாட வேண்டும். தமிழகத்தில் காய்ச்சலின் தாக்கம் பல ஆண்டுகளாக உள்ளது.
தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். மழை அதிகமாக வரும்போது, நோய் பரவுவதற்கு வாய்ப்பு இன்னும் அதிகமாகும்.

ரஜினிகாந்த கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்காவிட்டாலும் சரி, அவர் பாஜவில் சேர வேண்டும் என விரும்புகிறேன். காங்கிரசுக்கு இந்தியாவில் எதிர்காலம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்