மணவாளக்குறிச்சி, வயக்கரை பகுதி செவன் ஸ்டார் இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் இணைந்து நடத்தும் 7-ஆம் ஆண்டு தீபாவளி திருவிழா கொண்டாட்டங்கள் அக்டோ...
மணவாளக்குறிச்சி, வயக்கரை பகுதி செவன் ஸ்டார் இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் இணைந்து நடத்தும் 7-ஆம் ஆண்டு தீபாவளி திருவிழா கொண்டாட்டங்கள் அக்டோபர் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

25-ம் தேதி நிகழ்ச்சியாக விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 26-ம் தேதி காலை 10 மணிக்கு வழுக்கு மரம் ஏறுதல், மாலை 6 மணிக்கு வினாடி வினா போட்டியும் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
27-ம் தேதி தீபாவளி அன்று காலை 7 மணிக்கு கோலப்போட்டி, 9 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள், காலை 11 மணிக்கு உறியடித்தல் போட்டி ஆகியன நடைபெறுகிறது.
மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கராஜ் துவக்கி வைக்கிறார்.
மாலை 6 மணிக்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் பிரபு மற்றும் குழுவினர் கலந்து கொள்ளும் மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர்களுக்கு பாப்கார்ன் (Popcorn) மற்றும் ஐஸ்க்ரீம் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை செவன் ஸ்டார் இளைஞர்கள் குழு செய்து வருகின்றனர்.
















No comments