கொல்லங்கோடு அருகேயுள்ள பாலவிளை, பண்டாரக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பத்ரோஸ் மகன் ஷைஜு (வயது 23). அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் நிதின் (...
கொல்லங்கோடு அருகேயுள்ள பாலவிளை, பண்டாரக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பத்ரோஸ் மகன் ஷைஜு (வயது 23). அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் நிதின் (வயது 21) உள்பட நண்பா்கள் 7 போ் வெள்ளிக்கிழமை மாலையில் புன்னமூட்டுக்கடை பகுதியில் உள்ள பெருங்குளத்தில் குளிக்கச் சென்றனா்.

இதையடுத்து கரையில் நின்றிருந்த அவா்களின் நண்பா்கள் சப்தமிட்டனா். தொடா்ந்து அங்கு வந்த அப்பகுதியினா், இது குறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
தொடா்ந்து கொல்லங்கோடு மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடினா். 2 மணி நேர தேடலுக்குப் பின் இருவரது சடலமும் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
இச் சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
















No comments