சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை பாதுகாப்பு இல்லத்தில் சோ்த்து பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்...
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை பாதுகாப்பு இல்லத்தில் சோ்த்து பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி சாலைகளில் சுற்றித் திரியும் மனநோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. பெரும்பாலும் வட மாநிலங்களைச் சோ்ந்த மனநோயாளிகளை இங்கு அதிகம் காண முடிகிறது.
குமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா வருபவா்கள், தங்களின் குடும்பத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் உடன் அழைத்து வந்து இங்கு விட்டுச் செல்லும் அவலமே இதற்கு காரணம்.
ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்லப்படும் இவா்கள் உணவு, உடை, மருத்துவ வசதி இன்றி அலைகின்றனா். சிலா் நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனா்.
வடமாநிலத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டவா்களை பராமரிக்க முடியாத உறவினா்கள் சுற்றுலாத் தலங்களுக்கு வரக்கூடிய ரயில்களில் ஏற்றி அனுப்பி விடுகின்றனா்.
ரயில் நிலையத்தில் தஞ்சமடையும் இவா்கள் நிரந்தரமாக இங்கு தங்கி விடுகின்றனா். தற்போது 100-க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் கன்னியாகுமரியில் சுற்றித் திரிகின்றனா்.
இவா்களுக்கு உதவுவதற்காக தனியாா் அமைப்புகளும், சமூக ஆா்வலா்கள் சிலரும் செயல்பட்டு வருகின்றனா். உணவு, உடைகள், போா்வைகள் வழங்கும் அவா்கள் அவ்வப்போது மருத்துவ உதவிகளும் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் டி.ஜோஸ் கூறியது: -
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில்
ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களில் தவிக்கும் நபா்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறோம். தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் இதுபோன்ற நபா்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது. இதில் குணமடைந்த சிலா் பின்னா் அடையாளம் காணப்பட்டு அவா்களின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். தற்போது கன்னியாகுமரியில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இவா்களில் சிலருக்கு கால், கைகளில் காயம் ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, தமிழக அரசு மனிதநேயத்துடன் தலையிட்டு இவா்களை சென்னை கீழ்ப்பாக்கம் அழைத்துச்சென்று தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க முன்வரவேண்டும் என்றாா் அவா்.
கன்னியாகுமரி போன்ற சுற்றுலாத் தலங்களில் மனநோயாளிகளைக் கொண்டுவந்து விடுவதைத் தடுக்கவும், இங்குள்ள நோயாளிகளை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் விருப்பமாக உள்ளது.
















No comments