கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளை முன்னிட்டு (01-...
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளை முன்னிட்டு (01-11-2019 வெள்ளிக்கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 23-11-2019 (சனி) அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
உள்ளூர் விடுமுறையான 01-11-2019 அன்று குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
















No comments