மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி கடைவிளை பகுதியை சேர்ந்தவர் பரமசிவசங்கர். இவரது மனைவி ஜீவா (வயது 34). இவர் வெள்ளிமலை பேர...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி கடைவிளை பகுதியை சேர்ந்தவர் பரமசிவசங்கர். இவரது மனைவி ஜீவா (வயது 34).

இவர் வெள்ளிமலை பேரூராட்சியில் கொசு மற்றும் டெங்கு நோய் தடுப்பு பிரிவு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மாவிளை பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரின் குழந்தைக்கு காய்ச்சல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி ஜீவா அங்கு விசாரிக்க சென்றார்.
அப்போது ஜீவாவுக்கும், அழகர்சாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமி ஜீவாவை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கியதில் காயமடைந்த ஜீவா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து ஜீவா அளித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண் ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















No comments