Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

குமரி மாவட்டம் ஆலஞ்சியில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் வைத்து பாலப்பள்ளம் பேரூராட்சி சார்பில் டெங்கு ...

குமரி மாவட்டம் ஆலஞ்சியில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் வைத்து பாலப்பள்ளம் பேரூராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் அருட்சகோதரி சாந்தி ராணி தலைமை தாங்கினார். அருட்தந்தை மரிய சூசை வின்சென்ட், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி சூசைமேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாலப்பள்ளம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜமணி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ் மற்றும் ஜோஸ், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் டெங்கு கொசு எப்படி உற்பத்தியாகிறது. அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், கொசுவினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுசூழலை சுத்தமாக எப்படி வைக்கவேண்டும் உள்ளிட்டவைகள் குறித்தும் மாணவ, மாணவியருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்