Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கத்தார் நாட்டில் இறந்த ராஜாக்கமங்கலம் மீனவர் உடல் அடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 47). மீனவரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் கத்தார் நாட்டில் மீ...

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 47). மீனவரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் கத்தார் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்றார்.
அங்கு முபாரக் செய்யது அல்தாபி என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த 4-ம் தேதி கத்தார் நாட்டு படகில் சென்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டுருந்தபோது அந்த வழியாக வந்த கப்பல் இவர்களது விசைப்படகு மீது மோதியது.

இதில் பிலவேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிலவேந்திரன் கடந்த 18-ம் தேதி இறந்தார்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அவரது உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, இன்று காலை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்