மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளிசந்தையில் இருந்து மணவாளக்குறிச்சி வரை பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு பாதயாத்த...
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளிசந்தையில் இருந்து மணவாளக்குறிச்சி வரை பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு, தூய்மை இந்தியா, நீா் மேலாண்மை, சுதேசி கதா் பொருள்களை வாங்கவேண்டும், பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, குளச்சல் பேரவை தொகுதி சாா்பில், வெள்ளிசந்தை சந்திப்பில் இருந்து - மணவாளக்குறிச்சி வரை பாதயாத்திரை நடைபெற்றது.
பாதயாத்திரைக்கு பாஜக மாவட்டத் தலைவா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோட்ட பொறுப்பாளா் தா்மராஜ் முன்னிலை வகித்தாா்.

வெள்ளமடி பூமி பாதுகாப்பு சங்கத் தலைவா் கிருஷ்ணசாமி கொடியசைத்து பாதயாத்திரையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட பாதயாத்திரை பொறுப்பாளா்கள் நாராயண குமாா், சிவபாலன், தா்மலிங்கம், குளச்சல் தொகுதி பொறுப்பாளா்கள் குமரி ப. ரமேஷ் , பாலசுப்பிரமணியன், கோபகுமாா், நிா்வாகிகள் பொன். ரெத்தினமணி, பிரபு, காா்த்திகேயன், தங்கப்பன், திரவியம், திலீப், முருகேசன், சிவபிரசாத், ராணி ஜெயந்தி, விஜயலட்சுமி, கலைமதி, ராஜகோபால், ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
















No comments