Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே வீடுபுகுந்து பெண்ணின் 7 பவுன் தாலி செயின் பறிப்பு

மணவாளக்குறிச்சி அருகே அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி மேரி புஷ்பராணி (வயது 48). இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு கடை...

மணவாளக்குறிச்சி அருகே அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி மேரி புஷ்பராணி (வயது 48). இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் கணவன் மற்றும் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார். நள்ளிரவில் கழுத்தில் ஏதோ ஊர்வது போன்று இருந்ததால், மேரி புஷ்பராணி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகை காணாதது கண்டு கூச்சலிட்டார்.
அப்போது மர்மநபர் வீட்டின் பின்பக்கம் வழியாக ஓடியுள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருடனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மேரி புஷ்பராணி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த ஆன்றணி ராஜா வீட்டின் ஜன்னல் வழியே மர்மநபர் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ஆன்றணி ராஜா எழுந்து பாத்ரூம் செல்ல வந்ததால் மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அவர்கள் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு புகார்களையும் வழக்குபதிவு செய்து செயின் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்