Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே மீனவர் தூக்கிட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் பகுதியை சேர்ந்தவர் பெல்லார்மின். இவரது மகன் ஜியோ நெர்பின் (வயது 24). மீன்பிடி தொழில் செய்து வந்தார். ...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் பகுதியை சேர்ந்தவர் பெல்லார்மின். இவரது மகன் ஜியோ நெர்பின் (வயது 24). மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனது அறையில் தூங்க சென்றார். நள்ளிரவு சக தொழிலாளிகள் இவரை மீன்பிடி தொழிலுக்கு செல்ல, அழைக்க வந்தனர்.
அப்போது வெகுநேரமாக கதவை தட்டியும், ஜியோ நெர்பின் வெளியே வரவில்லை. தொடர்ந்து வீட்டில் உள்ளோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஜியோ, பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து இருந்தார். இதுகுறித்து வெள்ளிசந்தை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்