Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கணவன், மகனை உதறிவிட்டு முகநூல் காதலுடன் சென்ற பெண்

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 35). டெம்போ டிரைவர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 3...

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 35). டெம்போ டிரைவர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 32). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உண்டு.
கடந்த 12-ம் தேதி சுனில்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மகன் பள்ளிக்கு சென்றான். வீட்டில் ராஜகுமாரி மட்டும் இருந்தார். மதியம் சுனில்குமார் வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது ராஜகுமாரியை காணவில்லை.
உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு பல்வேறு இடங்களில் தேடினார்.ராஜகுமாரியின் செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவர் சுனில் குமாரிடம் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அரண்டுபோன அவர் மனைவியை காணவில்லை என நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து ராஜகுமாரியை தேடி வந்தனர். இந்நிலையில் ஒரு வழக்கறிஞர் மூலம் நேற்று ராஜகுமாரி காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். நித்திரவிளை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணியம்மாள் கணவன், மனைவியிடம் விசாரணை நடத்தினார்.

இதில் முகநூல் மூலம் திக்குறிச்சியை சேர்ந்த லாரி டிரைவர் ரெஜின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழப்போவதாகவும் ராஜகுமாரி கூறினார். இதில் முடிவில் எந்த மாற்றமுமில்லை என தெரிவித்தார்.
உடனே சுனில்குமார் அடுத்தவன் கூட வாழ நான் கட்டிய தாலி எதற்கு, தாலியை தா என கூற, உடனே தாலி, பிரெஸ்லெட், கொலுசு அனைத்தையும் கழற்றி கொடுத்தார்.

தொடர்ந்து ராஜகுமாரி தனது சான்றிதழ்களை கேட்டு வாங்கிவிட்டு முகநூல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழப்போவதாக கூறினார். சுனில் குமார் மகனுடன் வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்