Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாங்குநேரி தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள்

நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (21-ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலை 6 மண...

நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (21-ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இன்று கிராமம் கிராமமாக சென்று இறுக்திகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் வி. நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட மொத்தம் 23 வேட்பாளர்கள் உள்ளனர்.
அவர்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து திமுகவினர் வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பிக்கள் திருநாவுக்கரசர், ஹெச். வசந்தகுமார், ஞானதிரவியம், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். திமுக துணை பொதுசெயலாளர் ஐ. பெரியசாமி தலைமையில் அக் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் இத்தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர்.
குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் இன்று இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன், மாவட்ட துணை செயலாளர் அர்ஜுனன், தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, குருந்தன்கோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி செயாளர் ஜெயராஜ், முன்னாள் குளச்சல் நகரமன்ற உறுப்பினர் நூர் முஹம்மது, மணவாளக்குறிச்சி பேரூர் செயலாளர் நிஜாம் மற்றும் மன்சூர், அருள்தாசன், ஜெகன், ஸ்டாலின் உள்பட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்