மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால...
மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது.
இதனால் பெண்கள் தனியாக செல்ல அச்சமடைந்த வந்த சூழலில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், குளச்சல் டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தனிப்படை உதவி ஆய்வாளர் ஜாண் போஸ்கோ தலைமையிலான போலீசார், மண்டைக்காடு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டிவந்த வாலிபர் கேரள மாநிலம் திருவானந்தபுரம், திருவிச்சிவிளை வீடு வெளியன் கோட்டை பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 29) என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அஸ்வின் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து மண்டைக்காடு போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவ்வப்போது குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதில் மண்டைக்காடு புதூர் சி.ஆர்.நகர் ஜோசப் ஆன்றணியின் மனைவி மஜோரா (வயது 45) வின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதேபோல் மணவாளக்குறிச்சி பகுதியில் 6 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்ததையும் அஸ்வின் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மொத்தம் 15 பவுன் தங்கநகையை பறித்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து போலீசார் அஸ்வின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















No comments