தக்கலை அருகே காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் மனம் நொந்த காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார...
தக்கலை அருகே காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் மனம் நொந்த காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை அருகே திக்கணங்கோடு பொத்தைக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவின்தாஸ் (வயது 32). ஏசி மெக்கானிக். தன்னுடன் நட்பாக பழகிய ஒரு பெண்ணை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
நாளைடைவில் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காதலிக்கு திருமணம் நடந்துள்ளது. இதனால் பிரவின்தாஸ் மனமுடைந்து காணப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் வீட்டின் படுக்கை அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கரம்பிடிக்க முடியாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments