வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் நடந்தது. நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் காலை 10.30 மணிக்கு ...
வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் நடந்தது. நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள் காலை 10.30 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
விழா நாட்களில் தினசரி காலை 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6.30, பகல் 12.30, மாலை 6.30 மற்றும் இரவு 7.30 மணிக்கு தீபாராதனை, காலை 11 மணிக்கு அபிஷேகம், கடைசி நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு சுவாமி சூரசம்காரத்திற்காக எழுந்தருளல், தொடர்ந்து மலையடிவாரத்தை வலம்வந்து சரியாக மாலை 6.15 மணிக்கு சூரசம்காரம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழுத் தலைவர் சிவசெல்வராஜன், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், கோயில் ஸ்ரீகாரியம் சிவ பாஸ்கர், வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆஸ்ரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ், சிவாத்மானந்த மகராஜ், ஆலய முன்னேற்ற சங்கத் தலைவர் சிவகுமார், பொதுச்செயலாளர் பத்மதாஸ், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர்கள் வரதராஜன், ராஜகோபால் மற்றும் ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி.சாஸ்த்திரி மற்றும் மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்துடன் இணைந்து ஆலய முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.
கோயிலில் தொன்றுதொட்டு மலை அடிவாரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோல் நிகழ்ச்சி நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் இணை ஆணையர் மலை அடிவாரத்தில் வைத்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி சிறிது தாமதமானது. இதற்கு பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வெள்ளிமலை சுவாமி கூறும்போது அரசு வழிகாட்டி நெறிமுறையை கடைபிடித்து நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதை கடைபிடித்துதான் சுரசம்ஹார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திலும் கூறி அனுமதி பெற்றபிறகும் எங்களுக்கு கோயில் அதிகாரியால் அனுமதி மறுப்பது பக்கதர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என கூறினார்.
No comments