Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கருங்கல் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கருங்கல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தீவிர விசாரணை செய்...

கருங்கல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 
பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த மார்டீன் (எ) செல்வின் கிளைமெண்ட் என்பவர் மீது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பல வழக்குகள் கருங்கல் காவல் நிலையத்தில் உள்ளது. ஏற்கனவே குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையிலான தனிப்படையினர் மார்ட்டினை பிடித்து கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன ஐயர் மார்ட்டினை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்குபரிந்துரை செய்தார். 
அவரது பரிந்துரையை ஏற்று மார்டினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கருங்கல் ஆய்வாளர் மார்ட்டினை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்