Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கடியபட்டணத்தில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

கடியபட்டணத்தில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடியபட்டணம் லீமா காலனி சவேரியார் ...

கடியபட்டணத்தில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடியபட்டணம் லீமா காலனி சவேரியார் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி அடிமை மகன் சகாய சுந்தர்(36).
இவர் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் உண்டு. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சகாய சுந்தர், அவரது அறையில் தூங்கச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து சாப்பாடு கேட்பவர் நெடு நேரமாகியும் சாப்பாடு கேட்கவில்லை. இதனால் அவரை எழுப்பி சாப்பாடு கொடுப்பதற்காக அதிகாலை மனைவி மேரி கித்தேரி அஜிதா அவரது அறைக்கதவை தட்டியுள்ளார். 
ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர் சாவி துவாரம் வழியாக உள்ளே பார்த்தபோது மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் சகாய சுந்தர் காணப்பட்டார். 

உடனே இதுகுறித்து மேரி கித்தேரி அஜிதா மணவாளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீஸார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சகாய சுந்தர் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். 
உடனே போலீஸார் அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்