Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குமரி மாவட்ட கட்டிட தொழிலாளி சவுதியில் அடித்து கொலை..? நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 46). சவுதி அரேபியாவில் கிராத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரின் கீ...

கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 46). சவுதி அரேபியாவில் கிராத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரின் கீழ் கொத்தனாராக வேலை செய்து வந்தார்.
பல மாதங்களாக ஜார்ஜுக்கு சம்பளம் சரிவர வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. ஜார்ஜ்க்கு கிறிஸ்டோபர் ரூபாய் 6 லட்சம் வரை சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளதாம். இது சம்பந்தமாக ஜார்ஜ், கிறிஸ்டோபரிடம் பலமுறை கேட்டுள்ளார். 
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 17-ம் தேதி ஜார்ஜ் வீட்டில் இருக்கும் போது கிறிஸ்டோபர் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜார்ஜ் தமாம் அருகே கிம்பத் என்னுமிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி ஜார்ஜ் பரிதாபமாக இறந்தார். இறந்த தகவல் குறித்து வெளிநாட்டில் இருந்து ஜார்ஜ் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஜார்ஜ்க்கு ரமணி (46) என்ற மனைவியும், 23 வயது மகனும், 21 வயது மகளும், சாமிக்கண் (75) என்ற தாயாரும் உள்ளனர். 

ஜார்ஜ் இறந்த தகவல் அறிந்து கடந்த 3 நாட்களாக மனைவி சாப்பிடாமல் அழுத நிலையில் காணப்படுகிறார். மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டு இறந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  
கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் கேட்டு குமரி மாவட்ட ஆட்சியருக்கும், வெளி விவகார அமைச்சகத்திற்கும் ஜார்ஜ் மனைவி ரமணி புகார் அனுப்பியுள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்