Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நான் கிறிஸ்டியன் - அவர் முஸ்லீம்.. போலீசார் மிரட்டுவதாக குமரி மாணவியின் வீடியோவால் பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூரில் செல்வின் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 19 வயதான மகள் சஜி தனியார் கல்லூரியில...

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூரில் செல்வின் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 19 வயதான மகள் சஜி தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக அப்பெண் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சஜி மீண்டும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை செல்வின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
அப்போது, திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஷியாங்கோ என்ற இளைஞருடன் சஜி சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஷியாங்கோவின் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்த நிலையில், இளம்பெண் சஜி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஸ்கூல் படிக்கும்போதில் இருந்தே ஷியாங்கோவை காதலித்து வந்தேன். ஆனால் ஷியாங்கோ முஸ்லிம், நான் கிறிஸ்டின் என்பதால் எங்க வீட்ல ஒத்துக்கல. சாதி வெச்சி நிறைய பிரச்சனை எங்க வீட்டுல வந்தது. அது எனக்கு பிடிக்கல. 
இதனால் ஷியாங்கோவுடன் வெளியே வந்து தான் திருமணம் செய்து கொண்டேண். இப்போது, தனது கணவரின் குடும்பத்தினரையும் தன்னையும் போலீசார் மிரட்டுவதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் அப்பெண்ணின் புகாருக்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புகார் தொடர்பாக ஷியாங்கோவின் குடும்பத்தினரிடம் வழக்கமான விசாரணை மட்டுமே மேற்கொண்டதாகவும், விசாரணை முடிந்ததும் அவர்களை அனுப்பி விட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்