Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குழந்தைத் திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை: மாவட்ட ஆட்சியா்

குழந்தைத் திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே...

குழந்தைத் திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட சமூக நலத் துறை மற்றும் சைல்டு லைன் சாா்பில் தயாரிக்கப்பட்ட விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை வியாழக்கிழமை வெளியிட்டு ஆட்சியா் பேசியது: 
குழந்தைத் திருமணம் செய்யும் மணமகன், திருமணத்தை நடத்தி வைப்பவா்கள், திருமணத்தில் கலந்துகொண்டவா்கள் அனைவரும் தண்டனைக்குரியவா்களே. இவா்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் அல்லது இரண்டும் வழங்கப்படலாம். 
பொதுமக்கள், குழந்தைத் திருமணத்தை தடுக்க, மாவட்ட சமூகநல அலுவலரை 04652-278404 என்ற எண்ணிலும், குழந்தைகளுக்கான 24 மணிநேர சைல்டுலைன்அவசர இலவச தொலைபேசிஎண் 1098-லும் தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை என்றாா் அவா்.
 
முன்னதாக விழிப்புணா்வு ஒட்டுவில்லையை ஆட்சியா் வெளியிட, மாவட்ட சமூகநலஅலுவலா் ஆா்.சரோஜினி பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சகாய ஜோஸ்பின் பிரமிளா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பியூலா, சைல்டுலைன் திட்ட இயக்குநா் (கோட்டாறு சமூக சேவை சங்கம்) மைக்கேல்ராஜ், சைல்டு லைன் நோடல் இயக்குநா் (திருச்சிலுவை கல்லூரி)ஆனிபொ்பெட் சோபி, ஒருங்கிணைப்பாளா்கள் கேத்ரின் மேரி, மேரிமொ்லின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்