மணவாளக்குறிச்சி அருகே கூட்டுமங்கலம் பகுதியில் மின் கம்பத்தில் பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயமடைத்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு...
மணவாளக்குறிச்சி அருகே கூட்டுமங்கலம் பகுதியில் மின் கம்பத்தில் பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயமடைத்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் மகன் ஏனோஸ்(18). இவர் நாகர்கோவில் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது அண்ணன் அனீஷின் பைக்கை எடுத்துக் கொண்டு ராஜாக்கமங்கலத்தில் இருந்து குளச்சல் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
கூட்டுமங்கலம் பெட்ரோல் பம்பு அருகே வரும்போது முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில் நின்றிருந்த மின் கம்பத்தில் வேகமாக மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடனே அங்கு பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
இதுகுறித்து ஏனோஸ் மணவாளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















No comments