திருமணமானவர் என்று தெரிந்தும் அவரை காதலித்து ஊரைவிட்டு ஓடிவந்த 18 வயது இளம்பெண்ணுக்கு புத்திமதி சொல்லி போலீஸார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்....
திருமணமானவர் என்று தெரிந்தும் அவரை காதலித்து ஊரைவிட்டு ஓடிவந்த 18 வயது இளம்பெண்ணுக்கு புத்திமதி சொல்லி போலீஸார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் குலசேகரநல்லூரைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தந்தை போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது நெல்லை மாவட்டம் துறையூரில் உள்ள உறவினர் வீட்டில் காதலனுடன் சிந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து துறையூரில் இருந்த இருவரையும் , கங்கைகொண்டான் காவல்நிலையம் அழைத்து வந்தனர் . சிந்துவுடன் வந்திருந்த நபர் மாடசாமி (31) என்பதும் , அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் தெரியவந்தது .
ஆனாலும் அது தெரிந்தே சிந்து காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஆய்வாளர் சோபா ஜோன்சி அப்பெண்ணுக்கு அறிவுரை கூறினார்.
மாடசாமி திருமணம் ஆனவர் என்பதால் பின்னால் பல பிரச்னைகள் வரும் என்று ஆய்வாளர் புத்திமதி கூறியதை அடுத்து சிந்து பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார்.
















No comments