மணவாளக்குறிச்சி அருகே 700 கிலோ கடத்தல் ரேசன் அரிசியுடன் பிடிப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு...
மணவாளக்குறிச்சி அருகே 700 கிலோ கடத்தல் ரேசன் அரிசியுடன் பிடிப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
வெள்ளிச்சந்தை போலீஸ் தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. அருளரசு அழிக்கால் பகுதியில் ரோந்து சென்றார். மேற்கு அழிக்காலில் செல்லும்போது ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது.
சந்தேகமடைந்த அவர் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார். கடியபட்டணம் செல்லும் போது காரை மடக்கி பிடித்தார். பின்னர் வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்து போலீசாரை கடியபட்டணத்திற்கு வரவழைத்தார்.
விரைந்து வந்த போலீசார் கார் டிரைவர் மற்றும் கிளீனரையும் தப்ப விடாமல் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கார் டிரைவர் இரவிபுதூர்கடையை சேர்ந்த நிஷார்(24) மற்றும் கிளீனர் தக்கலை மேட்டுக்கடையை சேர்ந்த சேம்ராஜ் என்பதும் தெரிய வந்தது.
பின்னர் காரை சோதனை செய்த போது காரில் சிறு மூடைகளில் 700 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும், கார் மற்றும் அரிசி மூடைகளையும் நாகர்கோவில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
















No comments