கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு முழுதிருவுருவச் சிலை மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் தோவாளையில் ரூ. 92.27 லட்சம் செலவில் அமைக்க சென்...
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு முழுதிருவுருவச் சிலை மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் தோவாளையில் ரூ. 92.27 லட்சம் செலவில் அமைக்க சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோவாளையில் ரூ. 92.27 லட்சம் செலவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு முழுதிருவுருவச் சிலை மற்றும் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டியும் கொட்டாரம் பேரூராட்சி பெருமாள்புரத்தில் ரூ. 80.52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சார்நிலை கருவூலத்தின் புதிய கட்டிடத்தையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கி தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் சட்டமன்ற பேரவை விதி எண் 110 ன் கீழ் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ரூ 90 2.27 லட்சம் செலவில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும் அதில் நூலகமும் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து மண்டபம் அமைக்க ஆணையிட்டார்.
அதனடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து தோவாளையில் 195 சதுர மீட்டர் பரப்பளவில் மணிமண்டபமும் 125 சதுர மீட்டர் பரப்பளவில் நூலகம் என்று 320 சதுர மீட்டர் பரப்பளவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு முழு திருவுருவ சிலை மற்றும் மூலவர் துடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணி துரிதமாக துவங்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இவ்வாறு தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன், கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணகுமார், உதவி கலெக்டர் ரிஷாப், முன்னாள் அமைச்சர் பச்சைமால், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அழகேசன், முன்னாள் எம்எல்ஏ ராஜன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் கவிஞர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், பேரூர் கழக செயலாளர்கள் ஸ்டீபன், ராஜபாண்டியன், பார்த்த சாரதி, முத்துகுமார், சந்திரசேகர், வின்ஸ்டன், சீனிவாசன், மனோகரன், குமார், வர்த்தக அணி செயலாளர் ஜெசீம், எம் பி வசந்தகுமார், மாவட்ட கருவூல அலுவலர் பெருமாள், கூடுதல் சார்நிலை கருவூலர் கஜேந்திரன், உதவி சார்நிலை கருவூல அலுவலர் நம்பிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments