தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இணையவழி போராட்டம் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்த...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இணையவழி போராட்டம் நடந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும், அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் இணையவழி போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக திங்கள்நகர், திருவிதாங்கோடு, தக்கலை, குளச்சல், களியக்காவிளை, கடையாலுமூடு, தேங்காய்பட்டணம், இனயம், கோட்டார், ஆளூர், மந்தாரம்புதூர், பஞ்சலிங்கபுரம், திட்டுவிளை, மாதவலாயம், குலசேகரம், பண்ணையூர், இரவிபுதூர்கடை, நாகர்கோவில், மணவாளக்குறிச்சி, பழையக்கடை, வேர்கிளம்பி, மிடாலம் ஆகிய 23 இடங்களில் போராட்டம் நடந்தது.
இந்த தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட செயலாளர் நபில் அஹ்மது தெரிவித்துள்ளார்.
No comments