Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரியில் புதிதாக 7 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்வு

குமரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. குமரி மாவட...

குமரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 18 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு பெண் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 5 வயது பெண் குழந்தை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில் ஒருவர் மும்பையில் இருந்து வந்தவர். இவர் எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்தவர். மற்றொருவர் சென்னையில் இருந்து வந்தவர். இவர் கேரளபுரத்தைச் சேர்ந்தவர். இவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என 11 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதற்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மும்பையைச் சேர்ந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள் யாருக்கும் நோய்த்தொற்று இல்லை. கேரளபுரத்தைச் சேர்ந்தவரின் 27 வயது சகோதரிக்கு கொரோனா இருந்தது தெரிய வந்துள்ளது. இதைப்போல மயிலாடி மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக் கப்பட்டவருக்கு சிகிச்சைக்கு உதவிய 46 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர் விபரம்
சென்னை
6, 750
தூத்துக்குடி
70
திருவள்ளூர்
546
ஈரோடு
70
செங்கல்பட்டு
498
திருச்சி
67
கடலூர்
417
தென்காசி
64
அரியலூர்
353
நாகப்பட்டிணம்
50
விழுப்புரம்
308
விருதுநகர்
51
திருநெல்வேலி
194
சேலம்
44
காஞ்சிபுரம்
186
கன்னியாகுமரி
44
மதுரை
160
வேலூர்
34
திருவண்ணாமலை
151
திருவாரூர்
32
கோவை
146
ராமநாதபுரம்
31
பெரம்பலூர்
139
திருப்பத்தூர்
28
திண்டுக்கல்
121
சிவகங்கை
26
திருப்பூர்
114
கிருஷ்ணகிரி
20
கள்ளக்குறிச்சி
95
நீலகிரி
14
ராணிப்பேட்டை
81
புதுக்கோட்டை
7
தேனி
79
தர்மபுரி
5
தஞ்சாவூர்
72
பிற நோயாளிகள்
15
கரூர்
72


நாமக்கல்
77
மொத்தம்
11, 231
பிற நோயாளிகள்:- வெளிநாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளில் 13 பேர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த ரெயில் பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதேபோல் குளச்சல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள புல்லன்விளையைச் சேர்ந்த 21 வயது பெண், 2 வயது மகள் மற்றும் 39 வயது உறவினர் ஆகியோர் மும்பையில் இருந்து வந்துள்ளனர். அவர்களை ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கன்னியாகுமரியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
மேலும் காஞ்சாம்புறம் முறம்பு பகுதியைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆணும், அவருடைய 10 வயது மகளும் சென்னையில் இருந்து வந்தனர். அவர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கன்னியாகுமரியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இவர்கள் 5 பேருக்கும் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் கேரளபுரம் மற்றும் மயிலாடி மார்த்தாண்டபுரம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 5 பேர் அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்லாததால் அவர்களுடைய வீடு அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் இருந்து வந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என 6 பேருக்கும், சென்னையில் இருந்து வந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள் 5 பேருக்கும் என 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், உள்மாவட்டத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் என நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்கான கருவிகள் தேவையான அளவு இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்ட சுகாதாரத்துறையிடம் தற்போது 500-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகள் இருப்பில் உள்ளன. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்ட கருவிகள் உள்ளன. மேலும் 3 ஆயிரம் பரிசோதனை கருவிகள் சென்னையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அவை இன்று குமரிக்கு வந்து சேரும். எனவே பரிசோதனை கருவிகள் தட்டுப்பாடு என்பது தவறான தகவல் ஆகும் என்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...