குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.4¾ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் ஊரடங்க...
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.4¾ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 7 மற்றும் 8-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றது.

இந்தநிலையில் நிபந்தனைகள் எதையும் அரசு பின்பற்றவில்லை எனக்கூறி மதுக்கடைகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதோடு, ஆன்லைனில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன. இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகள் மீண்டும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 113 மதுபானக்கடைகளில் 100 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார். இது வழக்கமான நாட்களில் விற்பனையாகும் தொகையைவிட ஒரு மடங்கு அதிகம் ஆகும். இதில் பீர் வகைகள், ஒயின் வகைகளைவிட மதுபானங்கள்தான் அதிக அளவு விற்பனை ஆகி இருப்பதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
















No comments