Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது: செங்கல் சூளை உரிமையாளர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் அருகே தாழையூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த செங்க...

சேலம் மாவட்டம் மேட்டூர் கருமலைக்கூடல் அருகே தாழையூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் 12 வயது சிறுமியும், அவளுடைய தாயாரும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுபற்றி அந்த சிறுமியிடம் தாய் கேட்டபோது செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தி தான் காரணம் என கூறியுள்ளாள். பின்னர் மூர்த்தியிடம் அந்த சிறுமியின் தாய் சென்று இதுபற்றி கேட்டார். அப்போது மூர்த்தி அந்த சிறுமியின் தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி வெளியில் கூறக்கூடாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த சிறுமியிடம் கர்ப்பத்துக்கு காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளாள்.
பின்னர் இதுபற்றி அந்த சிறுமியின் தாய் கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக மூர்த்தியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கைதான மூர்த்திக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்