அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடி இடையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெபசெலவின் (வயது 27). சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த...
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடி இடையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெபசெலவின் (வயது 27). சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 14-06-2015 அன்று அதே பகுதியில் உள்ள 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் சிறுவனை மிரட்டி பாலியல் (ஹோமோசெக்ஸ்) துன்புறுத்துதல் கொடுத்ததாக தெரிகிறது.
இதை குறித்த தகவல் அறிந்த சிறுவனின் தந்தை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜெப செலவினை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு இன்று காலை கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) நம்பி தீர்ப்பு அளித்தார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட ஜெப செல்வினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் நடராஜமூர்த்தி ஆஜரானார்.
No comments