திங்கள்நகர் அருகே உள்ள நெய்யூர் ஆலன்கோடு பகுதியை சேர்ந்தவர் மணி. கூலித் தொழிலாளி. இவர் நேற்று உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உடலை த...
திங்கள்நகர் அருகே உள்ள நெய்யூர் ஆலன்கோடு பகுதியை சேர்ந்தவர் மணி. கூலித் தொழிலாளி.
இவர் நேற்று உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உடலை தகனம் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள சமுதாய சுடுகாட்டிற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.
ஆனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அங்கு உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மணியின் உறவினர்கள் திங்கள்நகர் – அழகியமண்டபம் ரோட்டில் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு 2 மணிநேரம் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலையில் இருந்த உடலை சாலையோரம் வைத்தனர்.
இதனால் சாலையில் போக்குவரத்து சீரானது. ஆனாலும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
No comments