குமரி மாவட்டத்தில் சகல ஆன்மாக்கள் தினத்தையொட்டி கல்லறை தோட்டங்களில் நேற்று சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்...
குமரி மாவட்டத்தில் சகல ஆன்மாக்கள் தினத்தையொட்டி கல்லறை தோட்டங்களில் நேற்று சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதியை இறந்தவர்களின் நினைவு தினமாக அனுசரிக்கின்றனர். இறந்த தங்களது உறவினர் மற்றும் முன்னோர்களுக்கு அவர்களது நினைவாக கல்லறைகளில் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று சகல ஆன்மாக்களின் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்களில் உள்ள புல், புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
நேற்று காலை முதல் தங்களது உறவினர் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மலர் மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
மாலையில் கல்லறை தோட்டங்களில் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பங்குதந்தையர்கள், போதகர்கள் கலந்து கொண்டனர். புனித சவேரியார் ஆலயத்தையொட்டி உள்ள கல்லறை தோட்டத்தில் நடைபெற்ற திருப்பலியில் மாவட்ட ஆயர் நசரேன் சூசை உள்பட பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
No comments