Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தக்கலை அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

தக்கலையை அடுத்த கொற்றியோடு அருகே உள்ள மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பன் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த மா...

தக்கலையை அடுத்த கொற்றியோடு அருகே உள்ள மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பன் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் ஆல்பன் ஊருக்கு வந்திருந்தார்.
அதன் பிறகு மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு அவர் ஏற்பாடுகள் செய்தார். அதன்படி கடந்த 19-ம் தேதி விமானம் மூலம் வெளிநாடு செல்வதற்காக திருவனந்தபுரம் சென்றார்.
அப்போது வீட்டில் இருந்த அவரது தாயார் ஆல்பனுக்கு போன் செய்து பேசினார். ஆல்பனின் மனைவி ஷெர்லின்லின்சி (வயது 24). தனது ஒரு வயது குழந்தையுடன் மாயமாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆல்பன் ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையை தேடினார். உறவினர்கள் வீடு, தோழிகள் வீடுகளில் தேடியபோதும் அவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் குழந்தையுடன் மனைவி மாயமானது பற்றி கொற்றியோடு போலீசில் ஆல்பன் புகார் செய்தார்.

இதுபற்றி கொற்றியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து குழந்தையுடன் மாயமான ஷெர்லின்லின்சியை தேடி வருகிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்