ராஜாக்கமங்கலம் பழவிளையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜோன் ஜீனத் (வயது 33). இவருடைய மனைவி இந்துராணி (வயது 32). இவர்களுக்கு திரும...
ராஜாக்கமங்கலம் பழவிளையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜோன் ஜீனத் (வயது 33). இவருடைய மனைவி இந்துராணி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3½ வயதில் நித்தின்ஜோ என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் ஜோன் ஜீனத் தினமும் மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். எனவே கணவரை, மனைவி இந்துராணி கண்டித்து இருக்கிறார். எனினும் அவர் வீட்டில் தகராறு செய்வதை நிறுத்தவில்லை என்று தெரிகிறது.
இதன் காரணமாக மனவேதனை அடைந்்த இந்துராணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைப் பாா்த்து அதிர்ச்சி அடைந்த உறவினா்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை இந்துராணி பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்துராணி மற்றும் ஜோன் ஜீனத் ஆகியோருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இந்த வழக்கு தொடர்பாக நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் விசாரணை நடத்துகிறார்.
இதற்கிடையே இந்துராணியின் சகோதரர் ரவிசந்திரன் (வயது 35) தலைமையில் உறவினர்கள் திரளாக வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், என் தங்கை இந்துராணிைய அவருைடய கணவர் ஜோன் ஜீனத் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்தார். என் தங்கை இறந்தால் தான் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்றும் கூறினார்.
இதை வைத்து பார்க்கும்போது இந்துராணி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே உண்மை சம்பவத்தை கண்டறியும் படி ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன். ஆனால் என் மனுவை போலீசார் கிழித்து போட்டுவிட்டனர். அவர்களாகவே எழுதி வைத்திருந்த புகார் மனுவில் என்னை மிரட்டி கையெழுத்து போட வைத்தனர்.
எனவே என் தங்கை சாவில் உண்மையை கண்டறிய வேண்டும். மேலும் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
















No comments