Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகர் சார...

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகர் சார்லி. ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினின் நினைவாக தனது இயற்பெயரான மனோகரை சார்லி என மாற்றிக்கொண்டார்.
1983-ம் ஆண்டு நகைச்சுவை நடிகராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சார்லி இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சினிமா மட்டுமில்லாது கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட சார்லி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்கின்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். அதற்கான நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 12-வது பட்டமளிப்பு விழாவில் நடிகர் சார்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கவுரவித்தார். அப்போது தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உடன் இருந்தார்.

முன்னதாக, தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் கடந்த 2013ம் ஆண்டு நடிகர் சார்லி M.Phil பட்டப்படிப்பு முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்