Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தக்கலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணன். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு் சென்னையில் உள்ள ஒரு ...

தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணன். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு் சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
பின்னர் வேலை பிடிக்கவில்லை என்று வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் தனது படிப்புக்கு ஏற்ற வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் பிரதீப் வீட்டின் அருகே விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்