தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, குளச்சல் தொகுதி எம்எல்ஏ அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடக்க உள்ள இடைதேர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, குளச்சல் தொகுதி எம்எல்ஏ அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடக்க உள்ள இடைதேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் தவறான செயல்களால் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்றும், இந்த கருத்தில் பின்வாங்குவதில்லை என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
இதற்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொதுவாக நீதிபதி முன் குற்றத்தை ஒப்புகொள்கிறவர்களுக்கு அதற்குரிய தண்டனை வழங்கப்படும்.
அதுபோல பொதுகூட்டத்தில் சீமான் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரை அரபு நாடுகள் போல் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வன்முறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். மற்றவர்களுக்கு இந்த தண்டனை முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
















No comments