நாகர்கோவில் அருகே உள்ள ஆணைப்பொத்தை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சே...
நாகர்கோவில் அருகே உள்ள ஆணைப்பொத்தை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொல்லை செய்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி விசாரணை நடத்தி சந்தோஷ்குமாரை கைது செய்தார்.
இவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தொடர்ந்து சிறுமிகளை குறிவைத்து பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. பலர் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
















No comments