Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவு கண்காட்சி

கள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 38 பேர் கிராமதங்கல் திட்டத்திற்காக குமரி மாவட்டத்திற்கு...

கள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 38 பேர் கிராமதங்கல் திட்டத்திற்காக குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
இதில் மாணவிகள் துர்காஸ்ரீ, கீர்த்திகா ரெட்டி, கிருத்திகா, நஸ்ரின், நிலோபர் நிஷா, சாலினி, சுப்புலெட்சுமி, சுவாதி, யாழினிஜெனி ஆகியோர் எறும்புகாடு முன்னோடி விவசாயி மீனாட்சி சுந்தரம் ஒத்துழைப்போடு கிராம தங்கல் நிகழச்சியில் கலந்து உள்ளார்.

உலக உணவு நாள் என்பதை தொடர்ந்து இந்த மாணவிகள் சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் 52 வகையான பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர்.

இந்த உணவுகளை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உணவு கண்காட்சியை நடத்தினர். இந்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அசோக் மேக்ரின், விவசாயி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்